ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் வரும் செப்டம்பர் 5ம் தேதி வரை நீட்டிப்பு
#ப_சிதம்பரம் #CaptainNews | #TamilNews
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை வரும் செப்டம்பர் 5ம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ஆகஸ்ட் 21ம் தேதி நள்ளிரவு முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.சிபிஐ காவலில் கடந்த 12 நாட்களாக விசாரிக்கப்பட்டு வருகிறார். நேற்றுடன் சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னிலையில், ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ப.சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன் அளிக்கக் கோரி அவரது சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் மனு தாக்கல் செய்தார். ஆனால் சிபிஐ தரப்பில், ப.சிதம்பரத்தை மேலும் ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க கோரிக்கை விடுத்தது.அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை மேலும் ஒரு நாள் நீட்டித்து உத்தரவிட்டார். மேலும் இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 21-ம் தேதி தன்னை சிபிஐ கைது செய்த விதம் சரியில்லை என்றும், அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வர இருந்த நிலையில் சிபிஐ பதில் மனுவை தாக்கல் செய்தது. அதில் ப.சிதம்பரத்தை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது , சிதம்பரம் தரப்பில் வழக்கறிஞர்கள் கபில் சிபல், சல்மான் குர்ஷித் ஆகியோரும், சிபிஐ விசாரணை அதிகாரி பார்த்தசாரதி,உள்ளிட்டோர் ஆஜராயிருந்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை வரும் செப்டம்பர் 5ம் தேதி வரை நீட்டித்தது உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் வரும் செப்டம்பர் 5ம் தேதி வரை நீட்டிப்பு video phone beyonce mp3 | |
3 Likes | 3 Dislikes |
73 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 3 Sep 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét